நாய்க்கடி... தடுப்பூசி போட்டும் 20 நாட்களில் சிகிச்சை பலனின்றி 12 வயது சிறுவன் உயிரிழப்பு!
மகாராஷ்டிரா தானே மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன், நாய் கடித்த சில வாரங்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளான். கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரேபிஸ் எதிர்ப்பு ஊசி மற்றும் டெட்டனஸ் ஊசி போடப்பட்டன. இதனால் சிறுவன் நலமடைந்ததாக குடும்பத்தினர் நம்பினர். ஆனால் சில நாட்களில் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது.
இதையடுத்து அந்தச் சிறுவன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இல்லை. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கடும் வேதனையில் உள்ளனர்.
இந்த மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் மெத்தனப் போக்கே காரணம் என உள்ளூர் எம்.எல்.ஏ ராயிஸ் ஷேக் குற்றம் சாட்டியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊழியர்களின் கவனக்குறைவும் இந்த நிலைக்கு காரணம் என கூறினார். இது குறித்து சட்டமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்படும் என அறிவித்துள்ளார். சிறுவன் மரணம் ரேபிஸ் பாதிப்பால் ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதி இன்னும் வெளியாகவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!