நாய்க்கடியை அலட்சியப்படுத்திய இளைஞர் நாய் போல் கத்தி சுருண்டு படுத்து உயிரிழப்பு!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரது மனைவி அமுதா. இவர்களின் 22 வயது மகன் ஆகாஷ் . இதில் ஜெயக்குமார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து ஆகாஷ் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய் ஆகாஷ் காலில் கடித்து விட்டதாக தெரிகிறது. அவர் உடனே அருகில் உள்ள பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை. அதே போல் அதற்கான நாய்க்கடிக்கு உரிய எந்த சிகிச்சையும் ஆகாஷ் முறைப்படி செய்து கொள்ளவோ நாய் கடித்தது குறித்து யாரிடமும் கூறவோ இல்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் ஆகாஷின் நடவடிக்கைகள் கடந்த 2 நாட்களாக வித்தியாசமாக இருந்துள்ளது.அதன்படி ஆகாஷ் திடீர் திடீரென நாய் போல் கத்துவது, ஓடிப் போய் சுருண்டு கீழேபடுத்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டார். இதை பார்த்து பதறி போன ஆகாஷின் தாய் மற்றும் சகோதரர்கள் உடனடியாக அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்தபோது நாய்க்கடி ரேபிஸ் உடல் முழுவதும் பரவியது உறுதி செய்யப்பட்டது. ஆகாஷுக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவருடைய உடலை சுகாதாரத்துறையினர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!