undefined

வந்தே பாரத் ரயிலில் நாய்களுக்கும் தனி வசதி… வைரலாகும் ‘டாக் பாக்ஸ்’!

 

இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ஹவுரா – காமாக்யா இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் செல்லப்பிராணிகளான நாய்களை அழைத்துச் செல்ல ‘டாக் பாக்ஸ்’ என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி 1.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

ரயிலுக்குள் கூண்டு போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டாக் பாக்ஸில், நாய்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வைக்க தனி இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேர நீண்ட பயணங்களில் செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த வசதி குறித்து மக்கள் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் இதை பாராட்டி வருகின்றனர். சிலர், முதல் வகுப்பு பெட்டிகளில் போல நாய்களை உரிமையாளரின் அருகிலேயே அமர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 16 ஏசி பெட்டிகள் மற்றும் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் வரும் இந்த ரயில், புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!