undefined

அனுமன் சிலையை 4 மணிநேரம் சுற்றி வந்து வழிபட்ட நாய்.. வைரலாகும் வீடியோ!

 

பொதுவாகவே விலங்குகள் கோவில்களுக்குள் நுழைவதும், தெய்வங்களுக்கு மரியாதை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் அவ்வப்போது செய்திகளில் இடம்பெறுவதுண்டு. ஆனால், ஒரு நாய் மனிதர்களைப் போலவே 'பிரதட்சணம்' செய்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த அனுமன் கோவில் ஒன்றில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. நேற்று ஜனவரி 15ம் தேதி பொங்கலன்று அதிகாலை முதல் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அங்கிருந்த தெரு நாய் ஒன்று, திடீரென அனுமன் சிலையைச் சுற்றத் தொடங்கியது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/bUVzM9PnhZU?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/bUVzM9PnhZU/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

ஏதோ ஒரு சில நிமிடங்கள் சுற்றிவிட்டு அங்கிருந்து சென்று விடும் என்று நினைத்த பக்தர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அந்த நாய் சோர்வே இன்றி சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக அந்தச் சிலையைச் சுற்றி சுற்றி வந்துள்ளது.

இதனைப் பார்த்த பக்தர்கள் அந்த நாயை விரட்டாமல், அது தனது பக்தியைச் செலுத்துவதாகக் கருதி அமைதியாக வழிபட்டனர். சிலர் இந்த அதிசய நிகழ்வைத் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!