காதல் தோல்வியால் மகன் தற்கொலை...  22 ஆண்டுகளுக்கு பிறகு   பொம்மைக்கு கல்யாணம் செய்து பெற்றோர் பரிகாரம்!  

 

தெலங்கானா மாநிலத்தில் காதலில் ஏற்பட்ட தோல்வியால் 22 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட தனது மகனுக்கு, அவரது பெற்றோர் தற்போது திருமணச் சடங்குகளை நடத்தியுள்ள நெகிழ்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு தான் விரும்பிய பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த அந்த இளைஞன் உயிரிழந்தார். திருமண வயதில் மகன் மறைந்தாலும் அவனுக்குரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்த பெற்றோர், தங்கள் குல வழக்கப்படி இந்த வினோத திருமணச் சடங்கை நடத்தியுள்ளனர்.

குடும்பத்தில் நிலவும் சில தோஷங்கள் நீங்கும் என்ற எண்ணத்திலும், மகனின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்ற பாசப் போராட்டத்திலும் இந்த விசித்திரமான காரியத்தைச் செய்ததாக அந்தப் பெற்றோர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர். காலங்கள் கடந்தாலும் மகனின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் பெற்றோரின் இந்தச் செயல் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படங்கள் பகிரப்பட்டு விவாதங்களை உருவாக்கி வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!