வதந்தியை நம்பாதீங்க... இன்று ராஷ்மிகா திருமணமா? உதய்பூர் வீடியோவின் பின்னணி இது தான்!
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடியின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் குறித்த உண்மையான தகவல் இது தான். அதற்குள் இன்று இந்த நட்சத்திர ஜோடி திருமணம் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தென்னிந்தியத் திரையுலகின் 'ஹாட் ஜோடி' என அழைக்கப்படும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா குறித்துத் தினமொரு செய்தி வெளியாகி வரும் நிலையில், இன்று பிப்ரவரி 2ம் தேதி இருவரும் உதய்பூரில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை குறித்து நாம் ஆராய்ந்தபோது சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
உதய்பூரில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் பிரமாண்டமான அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ள வீடியோவை ஒரு வோல்கர் (Vlogger) பகிர்ந்துள்ளார். அதில் இன்று பிப்ரவரி 2-ம் தேதி ராஷ்மிகா - விஜய் திருமணம் நடைபெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருக்கும் அலங்காரங்கள் ஒரு திருமணத்திற்காகச் செய்யப்பட்டவை என்பது உறுதியாகத் தெரிந்தாலும், அது இந்த நட்சத்திர ஜோடிக்காகத்தான் செய்யப்பட்டது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. பெரும்பாலும் இது போன்ற வீடியோக்கள் க்ளிக், லைக்ஸ்களுக்காக பலரும் பகிர்வதுண்டு.
கடந்த வெள்ளிக்கிழமை விமான நிலையத்தில் ராஷ்மிகாவைச் சந்தித்த புகைப்படக் கலைஞர்கள், "ஏன் எங்களுக்குத் திருமண அழைப்பிதழ் அனுப்பவில்லை?" என ஜாலியாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு மிகவும் இயல்பாகச் சிரித்த ராஷ்மிகா, "எதற்காக அழைக்க வேண்டும்?" எனக் கேட்டுவிட்டு, தனது அடுத்த படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் காலம் இருப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து நழுவிச் சென்றார். அவர் முகம் சிவந்து சிரித்ததை வைத்து ரசிகர்கள் ஊகங்களை வளர்த்தாலும், அவர் எங்கும் திருமணத்தை உறுதிப்படுத்தவில்லை.
கடந்த அக்டோபர் 3-ம் தேதி (தசராவுக்குப் பின்) ஹைதராபாத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இருவருக்கும் மிக ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இருவருமே இன்றுவரை புகைப்படங்களையோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பையோ வெளியிடவில்லை. ராஷ்மிகா தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்.
சில ஊடக அறிக்கைகள் பிப்ரவரி 26-ம் தேதி தான் திருமணம் என்று கூறி வருகின்றன. ஆனால், இன்றைய தேதியை (பிப்ரவரி 2) முன்வைத்து வைரலாகும் வீடியோக்கள் வெறும் அனுமானங்களின் அடிப்படையிலேயே உள்ளன. பிப்ரவரி 26 என்ற தேதியும் கூட அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
தற்போதைய நிலவரப்படி, ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா தரப்பிலிருந்து திருமண அறிவிப்பு குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. ராஷ்மிகா தனது அடுத்தடுத்த படப் பணிகளில் பிஸியாக இருக்கிறார். உதய்பூரில் இன்று திருமணம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவாகவே தென்படுகின்றன. எனவே, நட்சத்திர ஜோடியே அறிவிக்கும் வரை இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் செய்திகள் அனைத்தும் 'கிசுகிசு'களாகவே கருதப்பட வேண்டும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!