தண்டவாளங்கள் அருகே குப்பைகளை எரிக்காதீங்க...   இந்தியன் ரயில்வே! 

 

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ரயில் தண்டவாளங்களுக்கு அருகே பொதுமக்களும், சில நிறுவனங்களும் குப்பைகளைக் கொட்டி எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனச் சென்னை ரயில்வே கோட்டம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது. தண்டவாளப் பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் அடர்ந்த புகை, ரயில் போக்குவரத்தைப் பெரும் அளவில் பாதிப்பதாக ரயில்வே நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.

குப்பைகளை எரிப்பதன் மூலம் எழும் புகையினால், ரயில்களை இயக்கும் ஓட்டுநர்களுக்குச் சிக்னல்கள் சரியாகத் தெரிவதில்லை. இது பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், காய்ந்த சருகுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் எரியும்போது ஏற்படும் வெப்பம், தண்டவாளத்தின் ஓரங்களில் உள்ள சிக்னல் கேபிள்களை சேதப்படுத்துகின்றன. இதனால் ரயில் போக்குவரத்து அடிக்கடி தடைபடுவதோடு, பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.

தண்டவாளப் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டுவதும், அதை எரிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதை மீறுபவர்கள் மீது கடும் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ரயில்வே சொத்துக்களைப் பாதுகாப்பதும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்" எனக் குறிப்பிட்டுள்ள சென்னை ரயில்வே கோட்டம், பொதுமக்கள் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!