undefined

இந்தியா , பாகிஸ்தான் நாடுகளுக்கு போகாதீங்க...  பிரபல நாடு மக்களுக்கு எச்சரிக்கை!

 

ஜம்மு-காஷ்மீரில் ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட  தீவிரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத்  தொடர்ந்து, மே 7, 2025 அன்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA), இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை உடனடியாக ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டது. இதன் மூலம் இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்த நிலையில்,  பயணத் திட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலா நிறுவனங்கள், குறிப்பாக SGTrek மற்றும் பின்னாக்கிள் டிராவல், காஷ்மீருக்கான அனைத்து சுற்றுப்பயணங்களையும் ரத்து செய்துள்ளன. பயணிகள் முழுமையான பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர். பல நிறுவனங்கள் பாதுகாப்பு சூழ்நிலையை கண்காணித்து வருவதால், எதிர்கால பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
 

தூதரக சேவைகள், அவசரநிலைகளில் உதவ தயாராக உள்ளன. மேலும், நேபாளம், இலங்கை, பூடான் போன்ற நாட்டு சுற்றுலாக்கள் காஷ்மீருக்கு மாற்றாக மக்கள் தேர்வு செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சிங்கப்பூரின் சுற்றுலா துறையில் ஒரு முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் என பயண நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?