undefined

மிஸ் பண்ணாதீங்க... இன்று ஐபிஎல்  சென்னை - பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவக்கம்!

 

மிஸ் பண்ணாதீங்க. இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்குகிறது.

கடந்த மார்ச் 22ம் தேதி 18வது ஐபிஎல் சீசன் தொடர் போட்டிகள் கொல்கத்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி  4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனது கணக்கைத் துவங்கியுள்ளது. 


இந்நிலையில் வரும் மார்ச் 28ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று மார்ச் 25ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை - மும்பை அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 20 நிமிடங்களில் நிறைவடைந்தது. அதன்படி 38,000 இருக்கைகளுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஆன்லைனில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?