மிஸ் பண்ணாதீங்க... இன்றிரவு சென்னையிலிருந்து தென்காசி வரை சிறப்பு ரயில்!
மிஸ் பண்ணாதீங்க. இன்றிரவு சென்னையில் இருந்து தென்காசி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்காசிக்கு வரை இயக்கப்படும் இந்த ரயிலைப் பயன்படுத்திக்கோங்க.
சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 11.50 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு தென்காசி சென்றடையும். இந்த ரயிலில் 8 படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட பல முக்கிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!