"லேப்டாப்ல கேம் விளையாடாதீங்க.. யூ-ட்யூப் பார்க்காதீங்க!" - மாணவிகளுக்கு உதயநிதி அட்வைஸ்!
சென்னை காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் இன்று நடைபெற்ற "உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ், 898 மாணவிகளுக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மடிக்கணினிகளை வழங்கினார். அப்போது மேடையில் பேசிய அவர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மாணவர்கள் காட்ட வேண்டிய விழிப்புணர்வு குறித்து அதிரடி அறிவுரைகளை வழங்கினார்.
கடந்த காலங்களில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லேப்டாப் திட்டம், 2019-ல் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், இத்திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
"பள்ளி மாணவர்களை விடக் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினால், அது அவர்களின் உயர்கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் பேருதவியாக இருக்கும். பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்க இது ஒரு கருவியாக அமையும் என்பதால் தான் கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது" என உதயநிதி விளக்கமளித்தார்.
மாணவிகளிடம் லேப்டாப்பை ஒப்படைக்கும் போது அவர் ஒரு முக்கியமான வேண்டுகோளையும் வைத்தார்: "அரசு வழங்கும் இந்த லேப்டாப்பை வெறும் யூடியூப் (YouTube) பார்ப்பதற்கும், படம் பார்ப்பதற்கும், கேம் (Games) விளையாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தக் கூடாது. உங்கள் கல்வித் திறனை வளர்த்துக்கொள்ளவும், புதிய வேலைவாய்ப்புகளைத் தேடிக்கொள்ளவும் இதனை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்." பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவே 'புதுமைப்பெண்' திட்டத்தின் கீழ் மாதம் ₹1,000 வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!