பக்ரீத் குர்பாணி திறந்தவெளிகளில் பலியிடாதீங்க... ஜாமா மசூதி ஷாஹி இமாம் வேண்டுகோள்
தமிழ்நாட்டில் ஜூன் 7ம் தேதி சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி முஸ்லிம் சமூகத்தினா் திறந்தவெளிகளிலோ அல்லது தெருக்களிலோ விலங்குகளை பலியிடுவதைத் தவிா்க்கும்படி ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பக்ரீத் பண்டிகையொட்டி ஜாமா மசூதியின் நைப் ஷாஹி இமாம் சையத் ஷபான் புகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் பக்ரீத் பண்டிகையின் போது மக்கள் தங்கள் பகுதிகளில் தூய்மையை உறுதி செய்ய வேண்டும். ஹோலி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் இந்தியா முழுவதும் கண்ணியத்துடன் கொண்டாடப்படுவதுபோல, ஈத்-உல்அதாவையும் மரியாதையுடனும் பயபக்தியுடனும் கொண்டாட வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தினர் சில முக்கிய பொறுப்புகளை நினைவில் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, எந்தவொரு செயலும் சக குடிமக்களின் உணா்வுகள் அல்லது நம்பிக்கைகளை புண்படுத்தக்கூடாது. எனவே, பலியிடுதல்களை வீடுகள் அல்லது அதற்குரிய வளாகங்களுக்குள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்; சாலைகளிலோ அல்லது திறந்தவெளிகளிலோ அல்ல. பலியிடுவதை புகைப்படம் எடுப்பதையோ அல்லது படமாக்குவதையோ தவிா்க்க வேண்டும். அத்தகைய படங்கள் அல்லது வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்ற வேண்டும் என கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.
'இஸ்லாம் அமைதிக்கான மதம்'. யாருடைய உணா்ச்சிகளும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் இதை நம் நடத்தை மூலம் நிரூபிப்பது நமது கடமை. இஸ்லாம் அனைத்து மதங்களையும் மதிக்கக் கற்றுக்கொடுக்கிறது. மேலும், மற்றவா்களின் உணா்வுகளை ஒருபோதும் புண்படுத்தக் கூடாது என்று அதைப் பின்பற்றுபவா்களுக்கு அறிவுறுத்துகிறது. பலியிடுதல் சடங்கானது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பராமரிக்கும் வகையில் செய்யப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!