undefined

"எதையாவது கேட்டு ஸ்க்ரோல் போடாதீங்க... விஜய் விருப்பப்பட்டால் இதை இனி கண்டிப்பாக செய்வேன்!"  - செங்கோட்டையன் பேட்டி!

 

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே சரளைப் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் பிரசார நிகழ்ச்சிக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்பாடுகள் குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

விஜய்யின் வருகை ஒரு "வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இருக்கும்" என்று செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார். கூட்டத்திற்கான விரிவான ஏற்பாடுகள் குறித்து பேசினார். அப்போது, காவல்துறையினர் அறிவுறுத்தியதைவிடக் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ட்ரோன் கேமராக்கள் மற்றும் 40 சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

இந்நிகழ்வில் பங்கேற்க யாருக்கும் 'பாஸ்' கிடையாது, பொதுமக்கள் அனைவரும் வரலாம். ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் 20 தண்ணீர் தொட்டிகள் வழங்கப்படும். போதுமான கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவசரச் சிகிச்சைக்காக 14 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 42 மருத்துவர்கள், 72 செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர். ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். 10,000 தொண்டர்களுக்கும், 25,000 பொதுமக்களுக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியை விடச் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதிகமான கூட்டம் கூடினால், இடத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால், வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வர வேண்டாம் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். "எல்லோரும் வரவேண்டும், எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார். செய்தியாளர்கள் அரசியல் கேள்விகளைக் கேட்டு நெருக்கியபோது, செங்கோட்டையன் சிரித்துக் கொண்டே, "கேள்வி கேட்டு என்னை மடக்குகிறீர்கள். எதையாவது கேட்டு ஸ்க்ரோல் போட்டு விடாதீர்கள்," என்று கூறினார். மேலும், முன்னாள் அமைச்சர்கள் வேறு யாராவது த.வெ.க.வில் இணைய வாய்ப்பு உள்ளதா என்பதைப் பொறுத்திருந்துப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். "விஜய் விருப்பப்பட்டால் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்துத் தருவேன்" என்று அவர் உறுதியளித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!