18 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சாலைகளில் மீண்டும் 20 டபுள் டக்கர் பேருந்துகள்!
ஒரு காலத்தில் சென்னையின் அடையாளமாக இருந்த டபுள் டக்கர் பேருந்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 1970-ம் ஆண்டுகளில் தாம்பரத்தில் இருந்து சென்னை ஐகோர்ட்டு வரை இந்த பேருந்துகள் இயக்கப்பட்டன. மேல்தளத்தில் பயணம் செய்வதற்காகவே சுற்றுலா பயணிகள் சென்னைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தாலும், பராமரிப்பு செலவு அதிகமானதால் 2008-ம் ஆண்டு டபுள் டக்கர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு சென்னையில் இந்த பேருந்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. பலரும் இதை மீண்டும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டக்கர் பேருந்து மீண்டும் இயக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் 20 டபுள் டக்கர் பேருந்துகள் கொண்டு வர டெண்டர் விடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த மாதம் இறுதிக்குள் சென்னை சாலைகளில் டபுள் டக்கர் பேருந்து பயணம் தொடங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!