undefined

 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகள்... முதல்வர் தொடங்கி வைப்பு! 

 
 

 

சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேவையை தொடங்கி, பேருந்தை நேரில் பார்த்தார். அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் ரூ.1.8 கோடி மதிப்பிலான பேருந்தை அரசிடம் கொடுத்துள்ளனர்.

1970-ல் முதல் முறையாக இயக்கப்பட்ட இந்த சேவை 2007-ல் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து 20 பேருந்துகளை அசோக் லேலண்ட் நிறுவனத்திலிருந்து வாங்க திட்டமிட்டு பணிகளை முன்னெடுத்து வந்தது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக முக்கிய சுற்றுலாத் தலங்களில் சேவை இயங்க உள்ளது.

முதல்கட்டமாக மின்சார வசதியுள்ள டபுள் டெக்கர் பேருந்து வாங்கப்பட்டது. சிவப்பு நிறத்தில், இரு பக்கவாட்டிலும் தஞ்சை கோயில், கலங்கரை விளக்கம், ஜல்லிக்கட்டு காளை வீரன் போன்ற புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. “தமிழ் வாழ்க” எழுத்தும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. சேவை அடையாறு முதல் மாமல்லபுரம் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!