undefined

 சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவை ... 2 மாதங்களில் மீண்டும் தொடக்கம்!  

 
 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட டபுள் டக்கர் பேருந்து சேவை சென்னையில் மீண்டும் இயக்கப்பட வாய்ப்பு உருவாகியுள்ளதாக மாநகரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக 20 புதிய மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் வாங்கப்பட்டு, இரண்டு மாதத்துக்குள் நகர சாலைகளில் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் பகுதியாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. கடந்த 2023 முதல் டபுள் டக்கர் மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது புதிய மின்சார பேருந்துகளை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, தாம்பரம் - பிராட்வே இடையே இயக்கப்பட்ட டபுள் டக்கர் சேவை 2008-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தனியார் நிறுவனம் சார்பில் சோதனை பேருந்துகள் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் முழுமையாக இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!