சென்னையை உலுக்கிய இரட்டைப் படுகொலை... 5 பேர் கைது - மனைவி, குழந்தை கதி என்ன?
கடந்த ஜனவரி 26-ம் தேதி அடையாறு இந்திரா நகரில் சாக்கு மூட்டையில் ரத்தக் கறையுடன் கண்டெடுக்கப்பட்ட சடலம், ஒரு மிகப்பெரிய குடும்பப் படுகொலையின் தொடக்கம் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனவரி 26ம் தேதி காலை, அடையாறு இந்திரா நகர் 1-வது அவென்யூவில் சாக்கு மூட்டையில் தலை மற்றும் முகத்தில் வெட்டுக் காயங்களுடன் ஒரு வாலிபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த போலீசாரின் விசாரணையில் அவர் பீகாரைச் சேர்ந்த கௌரவ் குமார் (24) என்பதும், தரமணியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையை வீசிச் சென்ற இருவரை அடையாளம் கண்டனர். இதனைத் தொடர்ந்து கௌரவ் குமாரின் நண்பர் உட்பட 5 பேரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்துள்ளது.
கௌரவ் குமாரைக் கொன்றது மட்டுமல்லாமல், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது குழந்தையையும் கொன்று ஆற்றில் வீசியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஈடுபட்டதாக சிகந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் மற்றும் ஒருவர் (அனைவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள்) கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தையின் உடல்கள் எங்கே வீசப்பட்டன என்பதை அறிய, அடையாறு கெனால் ரோடு மற்றும் கூவம் ஆற்று முகத்துவாரம் பகுதிகளில் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!