நள்ளிரவில் இரட்டை கொலை.. தலைநகரில் பயங்கரம்! 

 

பல்லாவரம் அருகே திரிசூலம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2 ரவுடிகள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துளசிங்க முதலியார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இருவரை மர்ம கும்பல் ஒன்று திடீரென தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் இருந்து முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

விசாரணையில் உயிரிழந்தவர்கள் முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (21) மற்றும் சதீஷ் (22) என்பதும், இருவரும் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. ஆறுமுகம் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை தேடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!