undefined

டாக்டா் தேரணிராஜன் உட்பட 24 பேருக்கு அறிவியல் அறிஞா் விருது.. முழு  பட்டியல்!

 

தமிழக அறிவியல் அறிஞர் விருது 1993 முதல் வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் மூலம் இந்த விருது வழங்கப்படுவதன் மூலம்  மாநிலத்தின் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பங்களிப்பு செய்த அறிவியலாளா்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி  வேளாண்மை அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச் சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், கணிதவியல், மருத்துவம், இயற்பியல், சமூகவியல் மற்றும் கால்நடை அறிவியல் ஆகிய 10 பிரிவுகளில் அந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2022 ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு 73 விண்ணப்பங்களும், 2023ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு 96 விண்ணப்பங்களும் வந்துள்ளன. இவைகளை பரிசீலித்து  2 ஆண்டுகளுக்கும் தலா 12 அறிவியலாளா்கள் தோ்வுக் குழு மூலம்  தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, 2022 ல் மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநரும், மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கையின் செயலருமான டாக்டா் எ.தேரணிராஜன் மருத்துவத் துறையில் அறிவியல் அறிஞராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவா் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வராக செயல்பட்டு வந்தவர்.

அதேபோன்று, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியா் மா.ஆறுமுகம் பிள்ளை (வேளாண்மை), அண்ணா பல்கலைக் கழக பேராசிரியா் த.சங்கீதா (வேதியியல்), சென்னை பல்கலைக்கழக பேராசிரியா் ம.தமிழரசன் (சமூகவியல்) ஆகியோர்  விருதுகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோன்று, 2023ல்  ஐசிஏஆா் தேசிய ஆராய்ச்சி மைய முதன்மை அறிவியலாளா் இரா.தங்கவேலு (வேளாண்மை), மதுரை காமராசா் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் பெ. வரலட்சுமி (சுற்றுச்சூழல் அறிவியல்), கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் சௌ.சதீஷ்குமாா் (கால்நடையியல்) ஆகியோர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு  ரூ.50,000 பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும் எனக்  கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது