undefined

 டிசம்பர் 19ல் வரைவு வாக்காளர் பட்டியல்… இரட்டைப் பதிவு, இறந்தோர் விவரங்கல் ஆன்லைனில் வெளியீடு! 

 
 

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை (டிச.19) வெளியிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இரட்டை பதிவு வாக்காளர்கள், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பான விவரங்களை இணையதளம் வாயிலாக பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு தீவிர திருத்தப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எந்தத் தகுதியான வாக்காளரும் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரைவு பட்டியல் வெளியீட்டுக்கு முன்பாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பலமுறை வீடுகளுக்குச் சென்றும் தொடர்பு கிடைக்காத வாக்காளர்களின் விவரங்கள் தனியாகத் தொகுக்கப்பட்டன. இதில் இறந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்தவர்கள் அடங்குவர். இந்த வாக்குச்சாவடி வாரியான பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களுடன் நடைபெற்ற கூட்டங்களில் பகிரப்பட்டுள்ளது. கூட்டங்களின் நடவடிக்கை குறிப்புகள் BLO App-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

டிசம்பர் 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின்னர், மேற்கண்ட வகைகளில் இடம்பெறும் வாக்காளர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் பார்க்க வசதி ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். பிழைகள் இருப்பின் அவற்றை திருத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். வாக்காளர் பட்டியலைத் துல்லியமாக வைத்திருக்க இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!