undefined

திராவிட மாடல்.. அரைகுறை ஆடையுடன் பெண்களை அருகில் ஆடச் சொல்லி ரசித்த அமைச்சர் | உதயநிதி பர்த் டே கொண்டாட்டம்!

 

சிவகங்கையில் நடைபெற்ற துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாள் விழா மேடையில், நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண்களைத் தனது அருகில் வந்து ஆடச் சொல்லி கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் ரசித்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தி.மு.க. அரசின் தரம் தாழ்ந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் சமீபத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டமாக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் உட்படப் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விழாவின் ஒரு பகுதியாக, மேடையில் நடன நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, மேடையில் அரைகுறை ஆடைகளுடன் சில இளம்பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் பெரியகருப்பன், அந்தப் பெண்களைத் தனது இருக்கைக்கு அருகில் வந்து நடனமாடச் சொல்லி ரசித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "இதுதான் பெண்களை மரியாதையாக நடத்தும் அரசா?" என்று தி.மு.க. அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதைப் புறக்கணித்துத் தமிழுக்கு அவமரியாதை செய்த முதல்வர் அவர்களே, இன்று வாரிசு அரசியல் வழி வந்த உங்கள் புதல்வர் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் பெரியகருப்பனின் செயலால் தி.மு.க. அரசு எவ்வளவு தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்குச் சாட்சி. சிவகங்கையில் நடந்த விழாவில் அமைச்சர் அருகில் அரைகுறை ஆடையுடன் பெண்கள் நடனமாட அதை ரசித்துக் கொண்டிருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "ஏற்கனவே 'ஓசி பஸ்', 'பவுடர் வாங்குனிங்களா' என்று தொடர்ந்து கீழ்த்தரமாகப் பேசி வரும் வேளையில், உச்சகட்டமாக உல்லாச விடுதியில் ஆடுவது போலப் பெண்களை ஆட வைத்து ரசிக்கின்றனர். இதுதான் உங்கள் பெண்ணுரிமையா? சமூக நீதியா?" என்றும் வானதி சீனிவாசன் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதியாக, "வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பெண்கள் இதற்கெல்லாம் முடிவு கட்டுவார்கள். பீகாரில் பெண்கள் வாக்குகளே வெற்றிக்குப் பிரதானமாக எதிரொலித்தது போலத் தமிழகத்திலும் கண்டிப்பாக மாற்றம் நடக்கும்" என்று அவர் தி.மு.க.வுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!