அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... போக்சோவில் தட்டித் தூக்கிய போலீசார் !
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சீனிவாசன். இவருக்கு வயது 59. இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
ஆசிரியரின் இந்த செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இது குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதனர். இதனைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதன் பேரில் ஓவிய ஆசிரியர் சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து மற்ற மாணவிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!