பகீர்... கலப்பட பால் குடித்ததால் 4 பேர் பலி... 12 பேர் கவலைக்கிடம்!
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கலப்பட பால் குடித்ததால் 65 வயதுக்கு மேற்பட்ட 4 பேர் சிறுநீரகக் கோளாறால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் 12 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலில் குடிநீர் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் 105 குடும்பங்களில் நடந்த விசாரணையில், அனைவரும் ஒரே விற்பனையாளரிடமிருந்து பால் வாங்கியது தெரியவந்தது. அந்த பால் கலப்படம் செய்யப்பட்டிருந்ததால், அதை அருந்திய முதியவர்களின் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட்டதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட பால் விற்பனையாளர் கைது செய்யப்பட்டு, அவரது சட்டவிரோத பால் பண்ணை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விஜயவாடாவிலிருந்து வந்துள்ள சிறப்பு குழுக்கள் 75 பால் மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றன. சோதனை முடிவுகள் வந்த பிறகே எந்த வேதிப்பொருள் கலக்கப்பட்டது என்பது தெளிவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!