undefined

காதலனுடன் மதுவிருந்து... மேஜிக் மஸ்ரூம் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு... ஊட்டியில் சோகம்!

 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், விடுதியறையில் காதலனுடன் தங்கியிருந்த கல்லூரி மாணவி ஒருவர், மேஜிக் மஸ்ரூம் சாப்பிட்டத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஒன்றில் பயின்று வந்த மாணவி நீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் தனது காதலன் ஆர்யனுடன் ஊட்டியில் தனியார் விடுதி ஒன்றில் அறைஎடுத்து தங்கியிருந்தார். அப்போது காதலர்கள் இருவரும் மது அருந்தியதுடன், ‘மேஜிக் மஷ்ரூம்’ எனப்படும் போதை காளான்களையும் சாப்பிட்டிருக்கிறார்கள். 

இந்நிலையில் நள்ளிரவு நீலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது சாதாரண மயக்கம் என கருதி ஆர்யன் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை படுக்கையில் நீலா அசைவின்றி கிடந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போலீசார் நீலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறாய்வில் மதுவும் போதை காளானும் வினைபுரிந்து இதயத் துடிப்பு சீர்குலைந்ததே மரண காரணம் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஆர்யன் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!