மதரஸா பள்ளியில் ட்ரோன் தாக்குதல்… 9 குழந்தைகள் படுகாயம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணம் டேங்க் மாவட்டத்தில் உள்ள ஷாதிகேல் கிராம மதரஸா பள்ளிக்கூடத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. பள்ளியில் இருந்த மாணவர்களில் 6 சிறுவர்கள், 3 சிறுமிகள் உள்பட 9 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைகளின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்த சம்பவத்தைக் கண்டித்து உள்ளூர்வாசிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பிறகு, பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு ஏற்கனவே குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!