undefined

பிரதமர் மோடி வீட்டில் உச்சகட்ட பரபரப்பு... அதிகாலையில் டென்ஷனான அதிகாரிகள்!

 

தலைநகர் டெல்லியில்   பிரதமரின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை  பிரதமர் மோடியின் வீட்டின் மேல் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறந்ததால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் அதிகாலை ட்ரோன் பறந்ததால் அங்கு  பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் டெல்லி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது

 முதல் கட்ட  தகவலின் அடிப்படையில் டெல்லி காவல்துறை பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் பறந்தது குறித்து  தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படையினர் டெல்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.  டெல்லி போலீசார் ட்ரோனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

ஆனால் மர்ம ட்ரோன்  இதுவரை  கண்டுபிடிக்கப்படவில்லை. விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் அதிகாலையில் ட்ரோன் பறந்ததால் தலைநகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்