undefined

சிஎம்சி  மருத்துவர் வீட்டில் போதைப்பொருள்  ... மேலும் பல மருத்துவர்கள் தொடர்பு? திடுக்கிடும்  தகவல்கள்! 

 

வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள சிஎம்சி மருத்துவர்கள் குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரளாவை சேர்ந்த டாக்டர் பிளிங்கின் உள்ளிட்ட சில மருத்துவர்கள் அங்கு தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. வங்கி பண பரிவர்த்தனையில் முறைகேடு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றது.

சோதனையில் 10 கிராம் மெத்தாம்பெட்டமைன், 100 கிராம் கஞ்சா, போதைக்கு பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் பவுடர் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும் சில ஆவணங்கள், கணினி உள்ளிட்ட பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப்பொருட்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வாங்கப்பட்டதா அல்லது விற்பனைக்காக வைத்திருந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டாக்டரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து வர கேரளாவுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. டாக்டர் பிடிபட்ட பிறகே போதைப்பொருள் தொடர்பான முழு விபரங்கள் வெளிவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!