ஈரான் - அமெரிக்கப் போர்...  உலகளவில் மருந்து மாத்திரைகள்  30 சதவீதம் வரை விலை உயர்வு!

 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மூண்டுள்ள போர் காரணமாக, வான்வழிப் போக்குவரத்து மற்றும் கடல்வழிச் சரக்குக் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதன் விளைவாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, உயிர் காக்கும் மருந்துகளின் விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, புற்றுநோய் மருந்துகள், இன்சுலின் மற்றும் அவசர கால உயிர் காக்கும் மருந்துகளின் வரத்து தடைபட்டுள்ளது. இதனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் பலவும் மருந்துப் பொருட்களுக்கு இறக்குமதியையே சார்ந்துள்ள நிலையில், இந்தப் போர்ச் சூழல் அங்குள்ள மருத்துவக் கட்டமைப்பைப் பெரிதும் பாதித்துள்ளது.

உலக நாடுகளின் வான்வழிப் போக்குவரத்திற்கு முக்கிய மையமாக விளங்கிய துபாயில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மருந்துகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பும் இந்த விலை உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

அவசர கால மருந்துகள் பல நாடுகளுக்கு நேரடிப் பாதையில் செல்ல முடியாமல், நீண்ட தூரம் சுற்றி அனுப்பப்படுவதால் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், புற்றுநோய் மருந்துகள் போன்ற குளிர்சாதன வசதியுடன் பாதுகாக்கப்பட வேண்டிய மருந்துகள், போக்குவரத்துத் தடையால் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போர் நீடித்தால் காசா போன்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய மருந்துகள் தேங்கிக் கிடக்கும் சூழல் உருவாகும் என்றும், இது மிகப்பெரிய மனிதநேய நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!