குடிபோதையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை!
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்னிபாளையம் கோகுலம் காலனியை சேர்ந்த சுரேஷ் (50) ரியல் எஸ்டேட் மற்றும் கேட்டரிங் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மத்தம்பாளையம் அருகே உள்ள தனியார் மதுபான கடைக்கு மது அருந்த சென்றுள்ளார்.
அதே கடையில் மது குடித்துக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் (30) என்பவருடன் சுரேஷுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறிய நிலையில், தமிழ்ச்செல்வன் அங்கிருந்து சென்றுவிட்டார். போதையில் நடக்க முடியாத சுரேஷ் கடைக்குள்ளேயே படுத்திருந்தார். இரவு கடை மூடியபோது ஊழியர்கள் அவரை வெளியே தூக்கி வைத்து சென்றனர்.
சிறிது நேரத்தில் அரிவாளுடன் திரும்பி வந்த தமிழ்ச்செல்வன், சுரேஷின் கழுத்து, முகம், தாடை பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். சம்பவ இடத்திலேயே சுரேஷ் உயிரிழந்தார். பின்னர் சடலத்தின் அருகே அரிவாளுடன் அமர்ந்திருந்த தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!