போதையில் மிதந்த சப்-இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரிக்கே மிரட்டல்... வைரல் வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ஹசரத்கஞ்ச் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரியே மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஜெய்ஸ்வால் என்ற அந்த துணை ஆய்வாளர் (SI), மது போதையில் தனது காரை ஓட்டி வந்து அங்கிருந்த போக்குவரத்து தடுப்புகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதைத் தட்டிக்கேட்ட சக காவலர்களிடம் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையைத் தொடங்கியுள்ளார்.
உடனடியாகக் கைது செய்யப்பட்ட அந்த அதிகாரிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. பொதுமக்கள் மற்றும் சக அதிகாரிகளிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதற்காக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், "வேலியே பயிரை மேய்ந்த கதை" எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!