undefined

தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்பு… 5ம் தேதி வரை வறண்ட வானிலை!

 

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் மார்ச் 5ம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மார்ச் 6ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 7ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். 8ம் தேதி தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான பனிமூட்டம் நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!