undefined

சூர்யா46 படத்தில் துல்கர் சல்மான்?

 

நடிகர் சூர்யாவின் அடுத்த படமாக ‘கருப்பு’ திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கிடையில் தனது 46-வது படத்தின் படப்பிடிப்பிலும் சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா46’ என பெயரிடப்பட்டுள்ளது. மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் தயாரிக்க, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!