சந்திரபாபு நாயுடு சாதனை... மாணவர்களுக்கு 5,555 இ-சைக்கிள்கள்!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான குப்பத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் போது பெண்களுக்கு 5,555 இ-சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சி தலைவர்களுடன் விருந்தினர் மாளிகையிலிருந்து விழா மேடைக்கு அவர் சைக்கிள் ஓட்டியே சென்றார்.
பின்னர் பயனாளிகளுக்கு இ-சைக்கிள்களை வழங்கினார். ஒரே நாளில் 5,555 இ-சைக்கிள்கள் வழங்கியதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்தார். இதற்கு முன்பு 3,000 இ-சைக்கிள்கள் வழங்கி கின்னஸ் சாதனையில் இடம்பெற்றிருந்ததாக அவர் நினைவூட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, இ-சைக்கிள்களுக்கு ‘சூப்பர் சைக்கிள்’ என்று பெயரிட்டதாக கூறினார். இதன் மூலம் 60 கி.மீ வரை எளிதாக பயணம் செய்யலாம் என்றார். மாணவர்கள் பாதுகாப்பாக குறைந்த செலவில் செல்ல முடியும் என்றும், ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை சேமிப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!