ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...டெல்லியிலும் நில அதிர்வு.. பீதியில் பொதுமக்கள்...  !

 

ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 2.50 மணிக்கு  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6. 1 ஆக பதிவாகியுள்ளது. இதனால், டெல்லி உட்பட  வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.  இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


தேசிய நில அதிர்வு மையம் இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  ஆப்கானிஸ்தானில்   6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்  ஆப்கானிஸ்தானுக்கு அருகில் ஏற்பட்டதாகவும், பிற்பகல் 2.50 மணியளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

மேலும், பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பூஞ்ச் ​​உட்பட  ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக  பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.   இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை  தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!