undefined

அதிர்ச்சி...  பயங்கர நிலநடுக்கம்...  வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்!

 

ஜப்பானில் ஜனவரி 3ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உறைந்தனர். வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் இன்று காலை மிசோரம் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி  காலை 7 மணிக்கு   மிசோரம் மாநிலம் லங்க்லே பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது.  

ரிக்டர் அளவுகோளில் 3.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம்  லங்க்லே பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில்   ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால்  நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.    ஜம்மு-காஷ்மீரில் நேற்று இரவு  3.9 ரிக்டர் அளவு பதிவான திடீர் நிலநடுக்கம்   பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில்   மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜப்பானில்  முதலில்  ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கம்  இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா மாகாணங்களை கொடூரமாக தாக்கியது.   தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கோர   நிலநடுக்கத்தால் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.  கடந்த சில நாட்களாக ரஷ்யா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால்  பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!