undefined

 மீண்டும் குலுங்கிய ஜப்பான்... 6.7 ரிக்டர் நிலநடுக்கம்...  சுனாமி அலைகள் உருவானதால் பரபரப்பு!

 
 

ஜப்பான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சிறிய அளவிலான சுனாமி அலைகள் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் அமோரி மாகாணத்தின் ஹோன்ஷூ பகுதியில் இது நடந்தது. இன்று (டிச. 12) காலை 11.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது 20 கி.மீ. ஆழத்தில், 6.7 ரிக்டர் அளவில் இருந்ததாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஹொக்காயிடோ மற்றும் அமோரி கடல் பகுதிகளில் சுனாமி அலைகள் உருவாகின. அவை சிறிய அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதற்கு முன், டிசம்பர் 8-ம் தேதி ஜப்பானில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 7.5 ரிக்டர் அளவில் இருந்தது. அப்போது பசிபிக் கடலில் 2 அடி உயர சுனாமி அலைகள் உருவாகின. அந்த நிலநடுக்கத்தில் 34 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், ஜப்பானில் 8 ரிக்டருக்கும் அதிகமான சக்திவாய்ந்த நிலநடுக்கம் வரலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்குப் பதற்றம் நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!