மணிப்பூர், அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்!
தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களில் சில மணிநேர இடைவெளியில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
மணிப்பூர் அதிகாலை 1:21 மணி அளவில், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது. மணிப்பூரின் தெங்னௌபால் பகுதியில், பூமியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. அதே போன்று அசாம் மாநிலத்தில் அதிகாலை 3:19 மணி அளவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவாகியுள்ளது. அசாமின் ஹைலகண்டி பகுதியில், சுமார் 29 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிலநடுக்கங்களும் மிதமான அளவிலேயே இருந்ததால், பெரிய அளவிலான உயிர்ச் சேதமோ அல்லது கட்டடப் பாதிப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், அதிகாலையில் ஏற்பட்ட இந்த அடுத்தடுத்த நில அதிர்வுகளால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறிச் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.வடகிழக்கு இந்தியா நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய அபாய மண்டலத்தில் (Seismic Zone V) உள்ளதால், இத்தகைய நில அதிர்வுகள் அப்பகுதி மக்களிடையே தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!