undefined

 விருதுநகர் மாவட்டத்தில் திடீர் நில அதிர்வு… மக்கள் பீதி!

 
 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 9.08 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. திடீரென ஏற்பட்ட அதிர்வால் பலர் வீட்டைவிட்டு வெளியே ஓடினர்.

சிவகாசி, மாரனேரி, ஈஞ்சார், ராஜபாளையம், சஞ்சீவிமலை, கிருஷ்ணன்கோவில், மல்லி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு தெளிவாக உணரப்பட்டது. சில வீடுகளில் பொருட்கள் கீழே விழுந்தன. ஆனால் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நில அதிர்வு குறைந்த தீவிரம் கொண்டது என்றும், பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் உறுதி செய்துள்ளன. மக்கள் அச்சப்பட வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். புவியியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்ட பின் முழு விவரம் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!