ஜம்மு காஷ்மீர் உட்பட பல பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ... அச்சத்தில் பொதுமக்கள்! 

 
 

 

தஜிகிஸ்தானில் நேற்றிரவு 11.34 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தீவிரம் 4.8 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.06 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

இதேபோல் நிகோபார் தீவுகளில் அதிகாலை 3.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தீவிரம் 4.6 ஆக பதிவாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இருப்பினும் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஜம்மு–காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் அதிகாலை 5.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தீவிரம் 4.7 ஆக பதிவாகியுள்ளது. பல இடங்களில் அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டாலும், உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் குறித்த தகவல் எதுவும் இல்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!