undefined

பூடான், திபெத், மியான்மர் பகுதிகளில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் - மக்கள் பீதி!

 

இன்று அதிகாலை முதல் மாலை வரை ஆசியாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் ரிக்டர் அளவுகோலில் மிதமான அளவிலான நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகியுள்ளன.

திபெத் அதிகாலை 4:23 மணிக்கு  ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக நிலநடுக்கம் பதிவானது. முன்னதாக நேற்றும் அங்கு 3.0 அளவில் அதிர்வு உணரப்பட்டது. அதே போன்று தஜிகிஸ்தான் பகுதிகளில் இன்று காலை 6:06 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற சற்றே வலுவான நிலநடுக்கம் பதிவானது. பூடானில் காலை 11 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 2.8 என்ற குறைவான அளவிலான அதிர்வு உணரப்பட்டது. திபெத் பகுதிகளில் பிற்பகல் 2:17 மணிக்கு மீண்டும் ஒருமுறை ரிக்டரில் 3.0 அளவில் நிலநடுக்கம் பதிவானது.

மியான்மர் பகுதியில் மாலை 4:13 & 4:27 மணிக்கு வெறும் 14 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ரிக்டர் 3.6 மற்றும் 3.5 அளவுகளில் பதிவாகின.

இந்தியாவின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது. மியான்மரில் நேற்றிரவு முதலே நில அதிர்வுகள் தொடங்கிவிட்டதாகவும், துருக்கியில் நேற்று உணரப்பட்ட 5.1 அளவிலான நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக இந்தப் பகுதிகளில் நிலத்தடி தட்டுகள் நகர்வதால் இந்த அதிர்வுகள் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.

பூடான், திபெத் மற்றும் வட இந்தியா உள்ளிட்ட இமயமலைத் தொடரை ஒட்டியுள்ள பகுதிகள் நிலநடுக்க மண்டலம் V ல் வருகின்றன. இங்கு இந்திய மற்றும் யூரேசிய நிலத்தட்டுகள் மோதிக்கொள்வதால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

நேற்று துருக்கியில் ஏற்பட்ட 5.1 அளவிலான நிலநடுக்கம் மத்திய தரைக்கடல் முதல் ஆசியா வரை நிலத்தடி அழுத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதுவரை இந்த நிலநடுக்கங்களால் பெரிய அளவிலான உயிர்ச் சேதமோ அல்லது கட்டிடச் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. இருப்பினும், தொடர் அதிர்வுகள் (Aftershocks) ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!