இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு... ‘ECINET’ செயலி மூலம் நேரடி தகவல்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சென்னையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு இதை அறிவித்தார். தேர்தல் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் அவர் பெருமையுடன் கூறினார்.
தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் 258 மையங்கள் இருக்கும். மாற்றுத்திறனாளிகள் நிர்வகிக்கும் 47 மையங்களும் செயல்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக 756 வாக்காளர்கள் இடம்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய முயற்சியாக ‘ECINET’ செயலி அறிமுகமாகிறது. இந்த செயலியை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் அறியலாம். தேர்தல் நாளிலும், வாக்கு எண்ணிக்கையின்போதும் முடிவுகளை நேரடியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் பெரிய அளவில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!