பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்… இந்திய வளர்ச்சி 7.2% வரை உயரும் கணிப்பு!
2025–26ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் 2027–28 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் உலக பொருளாதார நிலை நிச்சயமற்றதாக இருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து நேர்மறை பாதையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்ப்பை விட சிறப்பாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டுத் தேவை இந்திய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது. குறிப்பாக நகர்ப்புற நுகர்வு வலுவாக இருப்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவாக உள்ளது. இருப்பினும் உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகள் தாமதமாக தாக்கம் ஏற்படுத்தலாம் என்பதால் கொள்கை வகுப்பாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் ஆய்வறிக்கை அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!