undefined

 கே.என்.நேரு தொடர்புடையவர்கள் வீடுகள் அலுவலகங்களில்  ED ரெய்டு!  

 
 


 
தமிழகத்தில் இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் உறவினர்கள்  வீடுகளில் அமலாக்கத்துறை திடீர்  சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில்  அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான TVK நிறுவனத்தில் இந்த சோதனை தொடர்ந்தது.

சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி,  எம்ஆர்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, கே.என்.நேருவின் மகனும், திமுக எம்பியுமான அருண் நேருவுக்கு தொடர்புடைய சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நிறுவனத்திலும் அமலாக்கத்துறையினர் தங்கள் சோதனையை தொடர்ந்தனர்.

ED சோதனை சென்னையை தொடர்ந்து திருச்சியிலும்  சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சியில் கே.என்.நேருவின் மறைந்த சகோதரர் ராமஜெயம் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனை மேலும் நீண்டு தற்போது திருச்சி தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சோதனையில், துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதால் அவரது இல்லத்தின் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?