மத்தியில் மோடி மாநிலத்தில் அதிமுக... இபிஎஸ் சூளுரை!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுக–பாஜக கூட்டணி மேலும் வலுப்பெற்று வருகிறது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.
காலை உணவுடன் தொடங்கிய இந்த சந்திப்பில் நாளை மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் குறித்து விரிவாக பேசப்பட்டது. தொகுதி பங்கீடு, தேர்தல் உத்திகள், பிரசார திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டணி தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சந்திப்புக்குப் பிறகு பேசிய பியூஷ் கோயல், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஈபிஎஸ் தலைமை வகிப்பார் என்றார். திமுக ஆட்சியை வீழ்த்தி, மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்றும் கூறினார். இந்த அறிவிப்புகள் 2026 தேர்தல் அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!