undefined

“இந்த தேர்தலே திமுகவுக்கு கடைசி”... எடப்பாடி பழனிசாமி ஆவேசம்! 

 

வரும் சட்டமன்றத் தேர்தல்தான் திமுகவிற்கு இறுதித் தேர்தல் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இனி எந்த காலத்திலும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வராது என உறுதியாக தெரிவித்தார்.

2021 தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கைக்கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். எங்கு பார்த்தாலும் அரசுக்கு எதிராக போராட்டங்களே நடைபெறுகின்றன என்றும் கூறினார்.

செவிலியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரும் தொடர்ந்து போராடி வருவதாக குறிப்பிட்ட அவர், தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது என்றார். மக்களின் கடும் வெறுப்பை திமுக அரசு சம்பாதித்துள்ளதாக கூறிய எடப்பாடி, இந்த தேர்தலோடு மக்கள் திமுகவிற்கு முடிவான விடை அளிப்பார்கள் என தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!