undefined

7.5% இடஒதுக்கீடு விவகாரம்… சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி கே. பழனிசாமி, மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீட்டை திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்தது என்ற குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தார். இந்த திட்டத்தை திமுக வலியுறுத்தியது தவறான தகவல் என கூறிய அவர், அதற்கான ஆதாரம் காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே சட்டப்பிரிவு 162 மூலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில்தான் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது என விளக்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிய திமுக அரசு அதை நிறைவேற்றியதா என சவால் விடுத்தார். திமுக அரசு விளம்பர அரசியலில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை தற்போது திமுக செயல்படுத்தி வருகிறது என்றும் விமர்சித்தார். நாங்கள் செய்த திட்டங்களை விளம்பரம் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 11.19% என கூறப்படுவது திமுக சாதனை அல்ல எனவும், அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களின் தொடர்ச்சியால் ஏற்பட்ட வளர்ச்சிதான் எனவும் வாதிட்டார். அடுத்ததாக அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். அவரது இந்த உரை சட்டமன்றத்தில் கடும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!