முன்னாள் எம்.எல்.ஏ., உட்பட 4 பேர் கட்சியிலிருந்து நீக்கம்  - எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

 


சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்தியுள்ளார். கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 4 முக்கிய நிர்வாகிகளைக் கட்சியிலிருந்து நீக்கி அவர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அழகுவேல் பாபு (முன்னாள் எம்.எல்.ஏ.), ஏ.வி.எம். விநாயகமூர்த்தி, ஏ.வி.எம்.  ரகு, பாபு ஆகிய 4 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டது. கழகத்தின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது மற்றும் கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டது.

இந்த காரணங்களுக்காக, இவர்களுடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டிருப்பது கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர் தேர்வு அல்லது தேர்தல் பணி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தியில் இவர்கள் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!