நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது... பெட்ரோல் பங்குகளில் இனி இது கட்டாயம்.. மீறினால் பெட்ரோல் கிடையாது!
தலைநகர் டெல்லியில் நிலவி வரும் மிக மோசமான காற்று மாசைக் கட்டுப்படுத்த, மாநில அரசு இன்றிரவு முதல் அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஆனந்த் விகார் மற்றும் இந்தியா கேட் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு (AQI) அபாய அளவைத் தாண்டியுள்ளதால், பொதுமக்களின் சுவாச ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த அதிரடித் திட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் 'மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்' (PUC Certificate) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில், வாகனங்களில் செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படும் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பெட்ரோல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் அரசு அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க உள்ளனர். சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு இனி ஒரு சொட்டு எரிபொருள் கூட கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் மற்றும் புகைமூட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு, பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனைச் சமாளிக்க, டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் நகருக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நகருக்குள் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சுவாசப் பாதிப்புகளுக்கு உள்ளாவதைத் தவிர்க்க, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகள் காற்று மாசின் அளவை ஓரளவுக்குக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!