இனி முட்டைகளுக்கும் காலாவதி தேதி... ஏப்ரல் 1 முதல் அமல்...!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு முட்டையிலும் அதன் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளைக் கட்டாயமாக அச்சிட வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய விதியின்படி, காலாவதியான பழைய முட்டைகளை புதியவை என்று கூறி ஏமாற்றி விற்கும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான இந்த அதிரடி முடிவானது, சந்தையில் முட்டை விற்பனை மற்றும் தரம் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக முட்டைகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு சில வாரங்கள் மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்தும் நிலையில் இருக்கும் என்றாலும், பல வியாபாரிகள் அதனை முறையாகப் பராமரிக்காமல் பழைய முட்டைகளை விற்று வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்தால், வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் முட்டை எவ்வளவு பழமையானது என்பதனை அதன் மேல் உள்ள முத்திரையை வைத்தே எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். உணவுப் பாதுகாப்புத் துறையின் இந்த அதிரடித் திட்டம் நுகர்வோரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
புதிய சட்டத்தை மீறி காலாவதி தேதி இல்லாமல் முட்டைகளை விற்கும் வணிகர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அந்த முட்டைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வெப்பநிலையில் முட்டைகளைப் பாதுகாக்கத் தவறும் மொத்த வியாபாரிகள் மீதும் சட்ட ரீதியான விசாரணை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றமானது உத்தப் பிரதேசத்தில் முட்டை வர்த்தகத்தில் நிலவி வந்த முறைகேடுகளை முற்றுப்புள்ளி வைப்பதோடு, மக்களுக்குத் தரமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!