தமிழகத்தில் தேர்தல் கூட்டணி ... ஜனவரி 23ம் தேதி பிரதமர் மோடி பொதுக்கூட்டம்!
தமிழக சட்டசபை தேர்தலில் **அதிமுக கூட்டணியில்** பாஜக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியை வலுப்படுத்த சில கட்சிகளுடன் **திரை மறைவுப் பேச்சுவார்த்தைகள்** நடைபெற்றாலும், இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.
வரும் **ஜனவரி 23-ம் தேதி மதுராந்தகத்தில்** பிரதமர் **நரேந்திர மோடி** பங்கேற்கும் **தேசிய ஜனநாயக கூட்டணி** பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்பில், **தமிழக பாஜக** கூட்டணி கட்சி தலைவர்களை மேடையில் ஏற்றுவதை உறுதிப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இன்று இரவு மத்திய மந்திரியும், **தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்** சென்னை வருகிறார்.
இதற்குப் பிறகு, **அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்**, **தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்** ஆகியோர் சந்தித்து **கூட்டணி நிலையை இறுதி செய்வார்கள்** என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 23-ம் தேதிக்கான பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் **எடப்பாடி பழனிசாமி**, பாமக தலைவர் **அன்புமணி**, தமாகா தலைவர் **ஜிகே வாசன்**, புதிய நீதிக்கட்சி தலைவர் **ஏசி சண்முகம்**, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் **பாரிவேந்தர்** ஆகியோர் மேடையில் இருப்பார்கள். **அமமுக, தேமுதிக** ஆகிய கட்சிகளும் சேர்வதற்கான உறுதி நாளை (புதன்கிழமை) ஏற்படுமானால், **டிடிவி தினகரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்த்** மேடையில் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!